இனயம் துறைமுகம் புத்தகத்திலிருக்கும் ஒரு தகவல்பிழையை நண்பர் N.D. தினகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“உங்களது இனயம் துறைமுகம் புத்தகத்தை பார்த்தேன். பக்கம் 125 ல் தவறான தகவல் இருந்ததாலயே இந்த பதிவு.
திருவாங்கூர் சமஸ்தானத்தில் 1948 ல் நடைபெற்ற தேர்தலில் மட்டுமே மீனவருக்கு தனித் தொகுதி தரப்பட்டிருந்தது. அகஸ்தீஸ்வரம் ( கத்தோலிக்கர்) என்பதே அந்த தொகுதியின் பெயர். இதில் பரதவர் சாதியைச் சேர்ந்த அம்புரோஸ் வெற்றிபெற்றார்.
1949 ல் திரு-கொச்சி மாநிலம் உருவான பிறகு 1952 ல் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.இதில் விளவங்கோடு தொகுதியில் சைமன் வெற்றி பெற்றார். விரைவில் ஆட்சி கவிழ்ந்துவிட்டதால் 1954 ல் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலின் போது தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டு புதிதாக கொல்லங்கோடு தொகுதி உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் போட்டியிட்ட சைமன் வெற்றிபெற்றார்.
சைமன் வெற்றிபெற்ற அந்த 2 தொகுதிகளும் பொதுத் தொகுதிகள் ஆகும். சைமனை எதிர்த்து துரைசாமி போட்டியிட்டதால் அது மீனவர் தொகுதி என்று பின்னாளில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது.”
சைமன் வெற்றிபெற்ற அந்த 2 தொகுதிகளும் பொதுத் தொகுதிகள் ஆகும். சைமனை எதிர்த்து துரைசாமி போட்டியிட்டதால் அது மீனவர் தொகுதி என்று பின்னாளில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது.”
உண்மைதான். கொல்லங்கோடு தொகுதி பொதுத்தொகுதியாகவே இருந்தது. நான் மீனவர்களின் தனித்தொகுதி என்று எழுதியது தகவல்களை சரிபார்ப்பதில் நடந்த பிழை. 1954-ம் வருடம் நடந்த தேர்தல் அறிக்கையை வைத்து சரிபார்த்தேன். அதில் திரு. சைமன் அலெக்ஸாண்டர், அவருக்கு எதிராக போட்டியிட்ட திரு. கொட்டில்பாடு துரைசாமி ஆகியோரின் பெயர்கள் மட்டுமே இருக்கின்றது. எனவே அது மீனவர்களின் தனித்தொகுதி என்று எண்ணவேண்டியிருந்தது. சிறைமீன்கள் அதிகாரத்தில் 1954-ம் வருட தேர்தல் அறிக்கையையே குறிப்பில் சுட்டியிருக்கிறேன். தவறை சுட்டிக்காட்டிய நண்பருக்கு நன்றி.